நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, January 14, 2009

சின்னவள்


என்னைத் தொட்டும் தொடாமல் நீ...
நாம் வாழும் இடம் ஒன்றுதான்....

ஆயினும் தொட்டுப்பிரியும் உன் செயல் என் ஆயுட்கால வேதனை...

நான் நெருங்கி வருகையில் நீ விலகியே ஓடுகிறாய்..

தொட்டுவிட்டால் ஒரே ஒரு நிமிடம் அணைத்தப்பின் கைவிட்டுச் செல்கிறாய்..

நிரந்தரமாய் நீ என்னோடு தங்கிவிட்டால்..

உலகோர் நம்மை வெறுத்து அப்புறப்படுத்துவாரென்ற பயமோ..

என் ஏக்கம் புரியாதவர்கள் அவர்கள்...

நீயுமா...???


நிலையான உன் தழுவலுக்கு ஏங்கும் சின்னமுள்...No comments:

Post a Comment