நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Wednesday, December 17, 2008

காதல் மனைவி கட்டிய தாஜ்மஹால்...


ஷாஜஹான் தனது காதல் மனைவிக்கு அன்பின் அடையாளமாக தாஜ்மஹால் எழுப்பியது மாதிரி பெண்களில் கணவனுக்காக பிரமாண்டமான நினைவுச் சின்னத்தை அமைத்த வரலாறு..



பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியான காரியா எனும் நாட்டை,ஒரு சிற்றரசன் ஆட்சி செய்தான்..அவன் பெயர் மாசோலஸ்-ஆணழகன்..அவனை ஆர்ட்டிமிர்ஸியா என்ற பெண் காதலித்தாள்..இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தார்கள்-திருமணமும் செய்துகொண்டார்கள்-அன்பைப் பொழிந்து வாழ்ந்தார்கள்...

துரதிர்ஷ்டவசமாய் மாஸோலஸ் நோய்வாப்பட்டு,இளம் வயதிலேயே இறந்து போனான்..ஆட்சிப்பொறுப்பை ஏற்கவேண்டிய கட்டாயம் அவளுக்கு..ஆனால் அவனது நினைவு அவளை மிகவும் வாட்டியது..அந்த நினைவுக்கு ஒரு வடிவம் கொடுக்க நினைத்தாள் அவள்..உலகத்தின் புகழ்ப் பெற்ற சிற்பிகள் வரவழைக்கப்பட்டார்கள் ..36 தூண்கள் அமைக்கப்பட்டன..அதற்குமேல் விண்முட்டும் அளவில் 24 கல்லறை..அதற்குமேல் மாசோலஸ் மன்னருடய பிரமாண்ட சிலை..கல்லறைக்குச் செல்ல 200 படிகள்..கண்ணைக் கவரும் ஓவியங்கள்..இப்படி எல்லாரையும் கவரும் வகையில் நினைவுச் சின்னம் அமைத்து அதற்கு மாசோலியம் என்று பெயரிட்டாள்..
இனி மனைவிக்காக ஷாஜஹான் கட்டிய தாஜ்மஹாலை மட்டுமே பேசிக் கொண்டிராமல் இந்த உன்னத மாசோலியம் பற்றியும் பேசுவோம்..காரணம் காதல் என்பது ஆணுக்கு வாழ்க்கையில் ஒரு அம்சம்தான்..ஆனால் பெண்ணுக்கோ அதுதான் வாழ்க்கை..

No comments:

Post a Comment