நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Saturday, December 27, 2008

காதலா...நட்பா...


கடற்கரை மணலில் உன் பாதப்பதிவில் நடைபயின்ற நிமிடங்கள்...

நூலகத்தில் உன்னைப் பார்த்தப்பிறகு புரட்ட மறந்த பக்கங்கள்...

சின்ன சின்ன சண்டையில் உன்னிடம் மன்னிப்பு வேண்டி நின்ற மெளனங்கள்...

தேநீர் இடைவேளை கூடுமிடத்தில் சொல்லித் திரிந்த சுவையான நிகழ்வுகள்...

வேலைபளுவில் சந்திக்க இயலாவிட்டால் ஞாபகமிருக்கென்று வரும் எஸ்.எம்.எஸ்..கள்..

சின்னஞ்சிறு வெற்றிக்கும் உரிமையோடு கேட்டுப்பெற்ற பரிசுகள்..

மழைநேர மாலையில் உன்னுடன் காப்பியோடு பேசிய கவிதைகள்..

இன்னும் எத்தனை எத்தனை நினைவுகள் இருந்தும் இப்பொழுது கூட புரியவில்லை..இது..

நட்பா...

காதலா....No comments:

Post a Comment