நந்தினி'யின் கற்பனை அகிலம்

நந்தினி'யின் கற்பனை அகிலம்

Friday, June 5, 2009

காதல் அழகானது


உன் புன்னகயை விட கோபம் அழகானது என்றாய்-முகம் சிவந்து தலை குனிந்தேன்..
உன்னைவிட உன் அக்காதான் எனக்கு பொருத்தமானவள் என்றாய்-அவமானத்தில் தலை குனிந்தேன்..

Tuesday, May 26, 2009

ஏக்கம்


என் இறுதிச் சடங்கில் என்னவனின் வருகைக்கு முன் என் விழிகளை மூடிவிடுங்கள்!!

என்னவனைப் பார்க்கும் போது இமைக்கவே சம்மதிக்காத விழிகள் மூடவா சம்மதிக்கும்..

Wednesday, February 4, 2009

உன்னில் நான்...


அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நீ எனக்கு உறவாக வேண்டாம்..

உறவுகள் என்றால் பிரிவுகள் ஏற்படும்..

என் நிழலாக வேண்டாம்...

அது எப்போதும் என்னுடனிருப்பதில்லை..

என் உடலோடு உயிராக நீ வேண்டும்...

உன்னைச் சுமப்பதிலே என் வாழ்க்கை முழுமை பெற வேண்டும்...

TeDDy BeaR...


படுக்கையறையில் நீ தனிமையில்-
உன்னை அணைத்துக்கொள்வேன் நான்...


விடிய விடிய உன்னோடுதான்-
விடியும்வரை உறவாடுவேன்...

இமைகள் மூடும் சுகமாய் நீ என்னுடன் இருந்தால்...

என் அழகிய TeDDy BeaR...

உயிர்....


நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால்
கண்ணீர்த்துளிகளுக்கு மதிப்பில்லை..

கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால்
கண்ணீருக்கே வேலையில்லை..

ஆயிரம் உறவுகள் அதில்
இறைவன் தந்த பரிசு நீங்கள்...

உங்களை நான் நேசிக்கவில்லை...

சுவாசிக்கிறேன்....

வலி..


இடி மின்னலின் தாக்கத்தைவிட நீ கொட்டிய வார்த்தைகள் அம்பாக பாய்ந்து என் இதயத்தை குத்தி ரணமாக்கிவிட்டது....

வாழ்க்கை..


வாழத்தெரியாமல் தவித்திருந்தபோது "அவன்" என்ற துணை சேர்ந்தது வாழ்வும் தந்து வாழவைத்தது..

என்ன காரணமோ...

இடையில் தலைகீழாய் மாறிப்போனது!!!!!

எத்தனையோ சோகங்களைத்தாங்கி எத்தனையோ சூழ்ச்சிகளில் மூழ்கி
"இன்பங்கலெல்லாம் துன்பங்களாகி கசந்து வேதனையின் உச்சமாகி
தனியாகவே தவித்திருந்திருக்கலாம் துணை இல்லாமலேயே"-என்று காலம்
கடந்து தீர்மானித்தது இதயம்.....